சினிமா
’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிரிச்சி சிவா நடிக்க இருக்கிறார்.
தமிழில் ‘சென்னை28’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. ‘மங்காத்தா’, ‘மாநாடு’ என பல படங்களை அவர் இயக்கினார். இப்போது தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
இந்த நிலையில் இயக்குநரும் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1989ம் ஆண்டு ராமராஜன், கனகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’.
திரையரங்குகளில் படம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை ஓடியது. இப்போது வரையும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. இதன் இரண்டாம் பாகத்தினை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘கரகாட்டன்’ படத்தில் கதாநாயகன் ராமராஜன் கதாபாத்திரத்தில்மிர்ச்சி சிவா நடிக்க இருக்கிறார் எனவும் முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோரே இந்தப் பாகத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
முதல் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்க, உருவாக இருக்கும் இதன் இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தி வெங்கட்பிரபு தரப்பு விரைவில் தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.