Connect with us

சினிமா செய்திகள்

பிரசாந்த்தின் ‘அந்தகன்’ படத்தை கைப்பற்றிய முக்கிய தயாரிப்பாளர்!

Published

on

பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி வரும் படம் அந்தகன். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையைத் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். 90களில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். அஜித், விஜய் இருவருக்கும் மிகப் பெரிய போட்டியாக இவரது படங்கள் இருந்து வந்தது. இவரது நடிப்பில் உருவான ஜீன்ஸ் படத்தை பார்க்காத 90’ஸ் கிட்ஸே இருக்கமாட்டார்கள்.

ஆனால் தற்போது இவர் பல்வேறு காரணங்களால் படங்களில் அதிகம் நடிக்காமலிருந்து வந்தார். இப்போது இவரது நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘அந்தாதூன்’ படம் ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கண் தெரியாதவர் போல நடிக்கும் ஹீரோ ஒரு கொலையைப் பார்த்து விடுகிறார். ஆனால் அதை அவர் பார்க்காதது போல காட்டிக்கொண்டாலும், அவர் அதை பார்த்தது எப்படியோ கொலை செய்தவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

அதன் பின் அவர்கள் ஹீரோவையும் கொலை செய்ய முயல்கிறார்கள். அதிலிருந்து ஹீரோ எப்படித் தப்பிக்கிறார் என்பதை பல்வேறு திருப்பங்கள் மற்றும் சஸ்பன்ஸ் என இருக்கையின் நுனியில் நம்மை அமர வைத்து பார்க்க வைக்கும் கதை தான் அந்தகன் படமாக உருவாகியுள்ளது.

பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திர்கனி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே அந்தகன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.

எனவே விரைவில் அந்தகன் படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி மற்றும் மலையாளத்தில் இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized30 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized3 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்21 மணி நேரங்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்21 மணி நேரங்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

பர்சனல் ஃபினான்ஸ்21 மணி நேரங்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

இந்தியா1 நாள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

இந்தியா7 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்7 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்4 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

Translate »