செய்திகள்
ஓட்டுக்கு பணம்….ஈபிஎஸ் நண்பர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை…

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையும் நடந்து வருகிறது. இது தொடர்பான புகார்களை தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயன்கள் பாளையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சமிக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் எனபவரின் வீட்டில் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. எனவே, அவரின் பண்னை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இளங்கோவன் தமிழக கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


















