இந்தியா
கொரோனாவை அடுத்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்: இந்தியாவில் 21 பேர் பாதிப்பு!

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா வைரஸ் உள்பட பல்வேறு விதங்களில் உருமாரி பொதுமக்களுக்கு பரவி வருகிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸும் திடீரென புதிய வகையில் உருமாறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் திடீரென பி.ஏ. 2 என்ற புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் உருமாறி இருப்பதாகவும் இந்த உருமாறிய வைரஸ் மத்திய பிரதேச மாநிலத்தில் 21 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
புதிய வகை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட அவர்களில் 6 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இந்த நிலையில் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் போலவே ஒமிக்ரான் வைரசும் உருமாறிக் கொண்டே இருந்தால் அனைவரும் பூஸ்டர் தடுப்பு ஊசி கட்டாயமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















