தமிழ்நாடு
ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது: போலீசார் அதிரடி

அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது புகார் அளித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதன் பின் அவர் தலைமறைவான நிலையில் 20 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றதன் காரணமாக தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது 30 லட்ச ரூபாய் மோசடி புகாரை விஜய நல்லதம்பி என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்த விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜய் நல்லதம்பியை விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்தனர்.
ஆனால் விஜய நல்லதம்பி திடீரென தலைமறைவாகியதை அடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் கோவில்பட்டியில் விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








