சினிமா செய்திகள்
நயன்தாரா இல்லாமல் பொங்கல் கொண்டாடும் விக்னேஷ் சிவன்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்!

பொங்கல் உள்பட அனைத்து பண்டிகைகளையும் நயன்தாராவுடன் கொண்டாடி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த ஆண்டு பொங்கல் தினத்தை தனியாக கொண்டாடி உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள், ‘என்ன தலைவா தனியாக பொங்கல் கொண்டாடுகிறீர்கள் என்று வேற லெவலில் க,மெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்பட அனைத்து பண்டிகைகளையும் இணைந்து கொண்டாடி வரும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி பொங்கல் திருநாளை மட்டும் தனித்தனியாக கொண்டாடியுள்ளனர்.
விக்னேஷ் சிவன் சபரிமலையில் ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பொங்கலை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது லட்சக்கணக்கில் லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்களும் புகைப்படத்தை போலவே வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CYsfclevvUn/


















