சினிமா செய்திகள்
’வலிமை’ தள்ளிப்போனதால் வரிசை கட்டி நிற்கும் சின்னபட்ஜெட் படங்கள்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்திற்காக தமிழகத்தில் உள்ள சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திடீரென ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொங்கல் தினத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ’வலிமை’ என்ற பெரிய பட்ஜெட் படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குருதி ஆட்டம், என்ன சொல்ல போகிறாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் தான் திரையரங்குகள் திறந்திருக்கும் என்பதும் இரவு காட்சி இல்லை என்ற போதிலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
















