தமிழ்நாடு
கொரோனா பரவல் எதிரொலி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 27-ஆம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாராளமாக வெளியிடலாம் என்றும் தேர்தல் தேதியை அறிவிக்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















