தமிழ்நாடு
முன்ஜாமீன் தள்ளுபடி எதிரொலி: ராஜேந்திரபாலாஜியின் அடுத்த அதிரடி!

முன்னால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிரடியாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பால்வளத் துறை உள்பட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் தான் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறிய ராஜேந்திர பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்ய தமிழக காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















