சினிமா
எதற்கும் துணிந்தவன் படக்குழுக்கு சூர்யா கொடுத்த சர்ப்பரைஸ்….

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சூர்யாவின் ரேஞ்சே வேறு மாதிரி ஆகிவிட்டது. அதோடும், அவரின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. எனவே, அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். அது தாமதம் ஆகும் என்பதால் அடுத்து அண்ணாத்த பட இயக்குனர் சிவாவின் இயக்கத்தில்அவர் அடுத்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு முன்பே அவர் பலா படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகம் கூறப்படுகிறது.

இதுபோக ஏற்கனவே, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை சூர்யா கொடுத்துள்ளார். அதாவது அப்படத்தில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் தங்க சங்கிலி ஒன்றை அவர் பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனக்கூறப்படுகிறது.


















