சினிமா செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வழக்கமான பரிசோதனைக்கு மட்டுமே சென்றிருப்பதாகவும் அவரது தரப்பில் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது சகோதரர் ராகவேந்திரா ஆகியோர் உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஜினிகாந்த் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனை வட்டாரங்கள் முடிவு செய்திருப்பதாகவும் இன்று இரவு அல்லது நாளை காலையில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இருப்பினும் அவரது உடல் நலம் நன்றாக இருப்பதை அறிந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


















