இந்தியா
ஆர்பிஐ தற்காலிக இயக்குனராக எஸ்.குருமூர்த்தி நியமனம்!

டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சதீஸ் மாரதே ஆகியோர் தற்காலிக இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்பிஐ தற்காலிக இயக்குனராக எஸ்.குருமூர்த்தி நியமனம்!
துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை இயக்கமான சுதேசி ஜக்ரான் மான்ச் இயக்கத்தின் துணை இயக்குனராக உள்ளார். அவர் 4 வருடம் இந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த நியமனம் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மொத்தம் 10 இயக்குனர்கள் மத்திய அரசால் ரிசர்வ் வங்கிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


















