இந்தியா
கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 40,000 பேருக்கு தொற்று பாதிப்பு!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கேரளா தான். இந்நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து இன்னொரு அதிர்ச்சிகர தகவல் வந்துள்ளது.
அதாவது, கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் சுமார் 40,000 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்று ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வரை பலரும் தெரிவித்து விட்டார்கள்.

அதே நேரத்தில் உலகில் எங்கும் இத்தனை எண்ணக்கையிலான நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதற்கு எந்த வித தரவுகளும் இல்லை. இதனால் இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்து உள்ளது.
எப்போதும் தொற்று நோய்களைப் பொறுத்தவரை உருமாறிய வகை மிக வேகமாகக் பரவக் கூடும். அந்த வகையில் தற்போது கேரளாவில் உருமாறிய கொரோனா தொற்று வகையால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.







