சினிமா செய்திகள்
#Vijay65- தளபதி பட நாயகிக்கு இவ்வளவு சம்பளமா..?

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் விஜய்யுடன் நடித்தால் தமிழ் திரையுலகில் மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற திட்டத்தில் பூஜா இருக்கிறார். இதனால் ஒரு சில படங்களில் இருந்து அவர் விலகிவிட்டு தளபதி 65 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.














