தமிழ்நாடு
கணவருக்கு கொரோனா: பிரியங்கா காந்தியின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து!

தமிழகத்திற்கு நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக வர திட்டமிட்டிருந்த பிரியங்கா காந்தி திடீரென தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகத்தில் அவர் வருகை தருவார் என்றும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்துக்கு ஆதரவாக வாக்கு திரட்டுவார் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் நாளை பிரியங்கா காந்தியின் வருகையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக நாளை தமிழகம் வர இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி தன்னையும் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அதன் காரணமாக அவரது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

















