சினிமா செய்திகள்
வெற்றிக்கு பின் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீராங்கனைகள்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதை அடுத்து வெற்றிக்குப்பின் இந்திய வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து டிரஸ்ஸிங் அறைக்கு வந்த இந்திய வீராங்கனைகள் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினர்.
இதுகுறித்த வீடியோவை வேதா கிருஷ்ணமூர்த்தி என்ற வீராங்கனையை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பாடலுக்கு திவ்யா, வனிதா ஆகாஷ் உள்ளிட்ட 4 வீராங்கனைகள் குதூகலமாக ஆட்டம் போட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதும், இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CMMy2-NJtqT/




















