Connect with us

சினிமா செய்திகள்

’மாஸ்டர்’ கடந்து வந்த பாதை: ஒருவருட கொண்டாட்டத்தில் படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ!

Published

on

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் அந்த படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படக்குழுவினரும் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ’மாஸ்டர்’ பட அறிவிப்பு வெளியானதிலிருந்து ரிலீஸானது வரை உள்ள சில காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

’மாஸ்டர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியானது. இதனை அடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியது என்றும், அதன் பின்னர் அந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் இணைந்ததும், அதன் பின்னர் படிப்படியாக படப்பிடிப்பு நடைபெற்றதுமான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

முதல் கட்டமாக டெல்லியிலும் பிறகு ஷில்லாங் என்ற சிறைச்சாலை பகுதியிலும் சென்னை மற்றும் நெய்வேலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது என்பதும் அந்த சோதனைக்கு பின்னர் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்ற செய்தி வந்ததும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் நெய்வேலியில் ரசிகர்கள் முன் விஜய் தோன்றி கையை தூக்கிய காட்சியும் இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இசை வெளியீட்டு விழா நடந்த காட்சிகள் அதனை அடுத்து அந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் டான்ஸ் ஆடிய காட்சிகள் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் திடீரென ரிலீஸ் நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும் அதனால் ’மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் பல மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான காட்சிகளும் உள்ளன.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி ஜனவரி 13-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டதும் 50% திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் வெளியாகி அதன் பின் 100% மாற்றப்பட்டதும் இந்த படம் ஏற்படுத்திய அபாரமான வசூல் குறித்த காட்சிகளும் உள்ளன. ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸானதும் அதற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அனைத்து வசூல் சாதனையையும் உடைத்ததும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா7 hours ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா7 hours ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா8 hours ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா1 day ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா1 day ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா4 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா4 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா6 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா6 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா7 days ago

வெறும் ஜட்டியோட நில்லு.. அப்ப தான் சான்ஸ்.. பிரியங்கா சோப்ராவுக்கே இந்த நிலைமையா?

சினிமா செய்திகள்7 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா6 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

சினிமா6 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

கிரிக்கெட்6 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

சினிமா6 days ago

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

சினிமா6 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

சினிமா6 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா7 days ago

ஒரு பக்கம் அன்னதானம்.. இன்னொரு பக்கம் அறிவு தானம்.. விஜய் அன்ன அறிவு அரசியல்!

சினிமா7 days ago

60ம் கல்யாணம் பண்ற வயசுல.. 2வது திருமணம்.. ரசிகர்களை அதிர வைத்த ஆஷிஷ் வித்யார்த்தி!

%d bloggers like this: