தமிழ்நாடு
அனைத்து விவசாயிகளுக்கும் கான்க்ரீட் வீடுகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாறிமாறி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் மேட்டூரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். மேட்டூர் அணை உபரி நீரை ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து விவசாயிகளுக்கும் காங்கிரட் வீடு கட்டித்தரப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் மேட்டூர் ஓமலூர் சங்ககிரி எடப்பாடி தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு உபரி நீர் செல்லும் என்றும் அதனால் அந்த பகுதி விவசாயிகள் பலன் தருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை விவசாய கடன்களை ரத்து செய்த ஒரே ஆட்சி அதிமுகதான் என்றும் தெரிவித்தார்.
அனைத்து விவசாயிகளுக்கும் காங்கிரட் வீடு கட்டித்தரப்படும் என்று தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


















