சினிமா செய்திகள்
த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் நடிகை நதியா… எந்த கதாபாத்திரம் எனத் தெரியுமா?

த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்கில் நடிகை நதியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால்- மீனா ஆகியோரின் நடிப்பில் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது த்ரிஷ்யம் 2. இந்தப் படம் முதல் பாகத்தைவிட அதிகப் பாராட்டுகளைப் பெற்று பெரும் வெற்றிப்படமாகி உள்ளது. இந்த சூழலில் த்ரிஷ்யம் 2 வெற்றியை அறிந்து உடனேயே ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

தற்போது தெலுங்கு த்ரிஷ்யம் 2 ரீமேக் படத்தில் நடிகர் வெங்கடேஷ்- மீனா நடிக்கின்றனர். இந்தப் படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லி ஆக நடிகை நதியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நதியா ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் வரிசையாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் தெலுங்கு படம் ஒன்றிலும் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிலும் நதியா நடிக்கத் தயாராகி வருகிறார்.















