செய்திகள்
நடிகர்களை வைத்து விழிப்புணர்வு பரப்புரை – தேர்தல் ஆணையத்தின் புதிய திட்டம்…

நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்துவதற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்டவர்களை கொண்டு வாக்கு செலுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
மேலும் அவர் 2021 சட்டமன்ற தேர்தலின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேர்தல் முடியும் நேரத்தில் ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி 27 முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. சென்னையில் 16 மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த பின்னர் சத்யபிரதா சாகு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்








