தமிழ்நாடு
தீர்ப்பின் 35-வது பத்தியை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ்: ஈபிஎஸ்-க்கு மீண்டும் குடைச்சல்!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது இந்த கொண்டாட்டங்களை ஆஃப் செய்யும் விதமாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தீர்ப்பில் உள்ள ஒரு முக்கியமான பாய்ண்டை மையமாக வைத்து காய் நகர்த்தி உள்ளது ஓபிஎஸ் தரப்பு.

#image_title
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது ஈபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடி இந்த தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் 35-வது பத்தியில் பொதுக்குழு தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
எனவே பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான சிவில் வழக்கை தாக்கல் செய்து தொடர்ந்து நடத்த உள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கான காலம் 2026 வரை உள்ளது.

#image_title
எனவே பொதுக்குழுவில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அதிமுக சட்ட விதிகளில் எந்தவித திருத்தமும் செய்யக்கூடாது. அவ்வாறு திருத்தம் செய்தால் அது நீதிக்கு எதிரானதும், என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இது எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும். எனவே ஜூலை 11-ந் நடந்த பொதுக்குழு தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். ஓபிஎஸின் இந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தும்.