சினிமா செய்திகள்
பிக்பாஸ் சோம் சேகரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்… ‘பிகில்’ நாயகி கமென்ட்..!

பிக்பாஸ் சோம் சேகரை நினைத்துப் பெருமைப் படுவதாக பிகில் நடிகை ரெபா ஜான் கமென்ட் செய்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சோம் சேகர். தற்காப்புக் கலை, மாடலிங், நடிப்பு என பிஸியாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னரே தமிழ் மக்களுக்கு சோம் சேகர் பரிச்சயம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மறை விளையாட்டு யுத்திகளின் மூலம் பல ரசிகர்களைப் பெற்றார்.
மேலும், கடந்த 4 பிக்பாஸ் சீசன்களிலேயே மிகவும் பாஸிட்டிவ் ஆன போட்டியாளர் என்ற அங்கீகாரத்தையும் மக்களிடம் இருந்து பெற்றவர். இவரது வெற்றி குறித்து பிகில் படத்தின் நாயகி ரெபா ஜான் இன்ஸ்டாகிராம் தளத்தில் கமென்ட் செய்துள்ளார். இதனால், பிகில் நாயகிக்கும் சோம் சேகருக்கும் எப்படி நட்பு என சமுக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.

சோம் சேகர் மாடலிங் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரப் படத்தில் ரெபா ஜான் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாகவே தற்போதும் ரெபா ஜான் சோம் சேகரை புகழ்ந்துள்ளாராம்.




