சினிமா செய்திகள்
சர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..!

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சர்வதேச தளத்தில் புதிதாக ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் 50 சதவிகித இருக்கைகள் உடனான திரை அரங்கங்களில் வெளியாகியும் தமிழகத்தில் பெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது மாஸ்டர். தமிழகத்தில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புதிய சாதனையை மாஸ்டர் திரைப்படம் புரிந்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் மாஸ்டர் படம் வெளியானது. இதில் சவுதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் திரை அரங்கங்களுக்கு வந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாஸ்டர் படத்தை பார்த்துச் சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் எந்தவொரு இந்திய திரைப்படத்துக்கும் இந்த மாதிரி கூட்டம் அலைமோதுவது இல்லையாம்.
அதனால், சவுதி அரேபியாவிலேயே அதிக மக்களால் குறைந்த நாட்களில் பார்க்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம்.









