சினிமா
ரஜினிக்கு பிடித்த இயக்குநர், தெறி படத்தின் நடித்த மகேந்திரன் புதிதாகப் பேட்ட படத்தில் இணைந்தார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாகப் பேட்ட படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் புதிதாக நமக்குக் கிடைத்த தகவலின்படி தெறி படத்தில் நடித்த மகேந்திரனும் இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாகச் செய்திகள் வருகின்றது.
மேலும், இந்தப் படத்தில் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக்கி, சசிகுமார், மேகா ஆகாஷ் என எக்கச்சக்கமாக நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். படத்தில் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ரஜினி நடிக்கும் சில காட்சிகளை வீடியோவாகவும் போட்டோவாகவும் சமூக வலைத்தளங்களில் உலவத் தொடங்கியதால் படக்குழு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதனை அடுத்துப் படப்பிடிப்புகளை உத்தரபிரதேசத்திற்கு மாற்றிப் பலத்த பாதுகாப்போடு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் ரஜினி இளமை, முதுமை எனப் பல கெட்டிப்புகளில் நடித்து அசத்தவுள்ளாராம், ஏற்கனவே இப்படத்தில் போதும் போதும் என்ற கூறும் அளவிற்கு நடிகர்கள் பட்டாளம் உள்ளது.







