சினிமா செய்திகள்
விக்ரமின் ‘மகாவீர் கர்ணன்’ டிராப்பா? விளக்கம் அளித்த படக்குழு

விக்ரம் நடிப்பில், மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் மகாவீர் கர்ணன்.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட மகாவீர் கர்ணன் படம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட சில நாட்களில் நின்றது. அதன் பிறகு விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார்.
அண்மையில் இயக்குனர் ஆர்.எஸ் விமலும் வேறு ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதக அறிவிப்பை வெளியிட்டார். எனவே மகாவீர் கர்ணன் திரைப்படம் டிராப் செய்யப்பட்டது என்ற தகவல் திரைத்துறை வட்டாரத்தில் பரவி வந்தது.

இது குறித்து மகாவீர் கர்ணன் திரைப்பட குழுவினரைத் தொடர்புகொண்ட போது, “மகாவீர் கர்ணன் டிராப் ஆகவில்லை. விக்ரம் கைவசம் தற்போதுள்ள திரைப்படங்கள் முடிவடைந்த உடன் மகாவீர் கர்ணன் திரைப்படம் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும்” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
மலையாத்தில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.விமல் என்பது குறிப்பிடத்தக்கது.


















