தமிழ்நாடு
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி!

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல் மக்கள் வெளியில் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்த படியாகக் கோவை மாவட்டத்தில்தான் 126 பேர் என கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.
எனவே தான் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வரை எல்லோரும் மாஸ்க் அணியவேண்டிய அவசியமில்லை. இருமல், இருப்பவர்கள் மட்டும் அணிந்தால் போதும் என்று கூறப்பட்டு வந்தது.








