தமிழ்நாடு
நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை
நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் எம்.எல் .ஏ பொன்முடி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ,தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளன.வேலூர் சி எம் சி ,அப்பல்லோ மருத்துவமனைகள் அனுமதி கோரியுள்ளன . மத்திய அரசிடம் கேட்ட பின்பு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும் .
கொரோனாவுக்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை .காய்ச்சல் ,சளி ,இருமல் மருந்துகள் மட்டுமே பரிசோதனை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





