தமிழ்நாடு
15 கோடி முட்டைகள் தேக்கம்

15 கோடி முட்டைகள் தேக்கம்
முட்டை,கோழிக்கறியால் கொரோனா வைரஸ் பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் 500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோழிக்கறி உற்பத்தியாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவித்துள்ளது .
பள்ளிகள் விடுமுறை விட்டதால் மேலும் 1 கோடி முட்டைகள் தேக்கம் அடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது .நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் விவாதித்த அதன் தலைவர் முட்டை,கோழிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நஷ்டத்தைச் சரி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
மேலும் அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு ,கோழிக்கறி,முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .இதுகுறித்து இன்று முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் கூறினார்.














