வணிகம்
8 வருடங்களுக்குப் பிறகு இந்திய வரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு டெல்லிக்கு வழித்தடத்தில் தாங்கள் அளித்து வந்த விமான சேவையை நிறுத்தியது.
அதன்பிறகு 8 வருடங்கள் கழித்து, அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமானத்தை இயக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் கூகுள், அமெசான், மைக்ரோசாஃப்ட் போன்ற பல முக்கிய நிறுவனங்களின் இந்திய கிளைகள், பெங்களூருவிலிருந்து செயல்பட்டு வருகின்றன.
இதனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கார்ப்ரேட் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாகவே, பெங்களூரு வழித்தடத்தில் விமான சேவை வேண்டும் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
எனவே அக்டோபர் மாதம் முதல், அமேரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சியாட்டில் – பெங்களூருவுக்கு நேரடி விமானத்தை இயக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








