வணிகம்
ஃபார்ச்யூன் இந்தியா 500 பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தை முந்திய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியல் இன்று வெளியானது.
இந்த ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்து வந்தது.
முதல் முறையாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஃபார்ச்யூன் இந்தியா 500 பட்டியலில் 5.81 லட்சம் கோடி ரூபாய் வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்த தனியார் நிறுவனமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் இதே இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

















