சினிமா
அஜித் அடுத்தப் படத்தின் இயக்குநர் வினோத்

இயக்குநர் சிவா இயக்கி வரும் “விசுவாசம் “ படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குநர் வினோத் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் பிங்க் ரீமேக் எனச் சொல்ல, வினோத் மிகவும் யோசித்தாராம்.
ரீமேக் படங்களை எடுக்க முடியாது, என்னிடமே கதை உள்ளது என வினோத் சொல்ல, அஜித் வினோத்திடம் சில நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினாராம். அந்தப் படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வருகிறது.

















