சினிமா செய்திகள்
இந்த புகைப்படத்தை பார்த்தா நீங்களும் லொஸ்லியா ஆர்மியில சேர்ந்துடுவீங்க!

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஞாயிறன்று தொடங்கி ஓடிக் கொண்டு இருக்கிறது. இம்முறை பிக்பாஸ் இல்லத்தில் இடம்பெற்றிருக்கும் போட்டியாளர்களில், அதிக கிரேஸ், இலங்கையில் இருந்து வந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவுக்குத் தான்.
இலங்கையில் பிறந்து வளர்ந்தாலும், லொஸ்லியா தனது கல்லூரி படிப்பையெல்லாம் தமிழ் நாட்டில் தான் முடித்துள்ளார்.
இலங்கையில் செய்தி தொகுப்பாளினியாக இருந்த லொஸ்லியாவை அதிரடியாக இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி களமிறக்கி, தமிழகத்தை தாண்டி, இலங்கை வரை தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற முடிவு செய்துள்ளது.
இம்முறை டைட்டிலையும் லொஸ்லியா தட்டிச் செல்வார் என்றே பலரும் பேசத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியாவின் க்யூட் புகைப்படம் ஒன்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ ட்விட்டரை பிஆர் டீம் கவனித்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



















