இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

- ஆபாச மெசேஜ் புகார் எதிரொலி! கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டில் திடீரென குவிக்கப்பட்ட கூடுதல் போலீசார்! எந்த நேரத்திலும் கைது?
- மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் பாங்கு ஒலிப்பதைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிராகரித்தது! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில்,
- – 63 எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். – 45 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் மசோதா தோல்வியடைந்தது
- விண்வெளியில் AI DATA CENTER-களை அமைக்க, பூமியின் சுற்றுப்பாதையில் 10 லட்சம் சாட்டிலைட்களை நிலைநிறுத்த SpaceX-க்கு அமெரிக்க அரசு அனுமதி. 2033-க்குள் இதற்கான பணிகளை தொடங்கி, 2035-க்குள் 1 லட்சம் சாட்டிலைட்களையும், 2038-க்குள் 5 லட்சம் சாட்டிலைட்களை நிலை நிறுத்தவும் ஒப்புதல். விண்வெளியில் கிடைக்கும் தடையற்ற சூரிய சக்தியைக் கொண்டு தரவு மையங்களை இயக்குவதன் மூலம், பூமியில் மின்சாரம், நீரின் தேவையைக் குறைக்க இலக்கு
- உச்ச நீதி மன்றம் ‘ நீதிமன்ற அவமதிப்புக்கு ” ஆப்பு வைத்து விட்டது என்றே தெரிகிறது. “நாங்கள் சர்வே கல்லில், கோவில் நிர்வாகம் விரும்பினால் ‘ ஒரு முறை ‘ தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்று மட்டுமே அனுமதி வழங்கினோம், அங்கு ‘ கட்டாயம் ‘ தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆணையிடவில்லை” என்று தெளிவுபடுத்தி விட்டது.
- பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட படங்கள், தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என NETFLIX நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவு! டிச.4 அன்று வெளியாகவுள்ள ‘ஜோ பச்சே ஹெய்ன் சங் சமைட் லோ’ என்ற பாகிஸ்தானிய தொடருக்கு சினிமா அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தல்.
- காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சின் தாக்கம், ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 13 அணுகுண்டுகளின் அழிவுக்கு இணையானது என ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பாரி ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்பாம் அமைப்பின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி டிசம்பர் 2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை மையம் கணிப்பு.
