இந்தியா
சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.
வீட்டுக்கு போடுறது பேட்டரி இல்லாத On Grid சிஸ்டம்.
பகல் கரண்ட் முதல்ல வீட்டுக்கு. மிச்சம் EB லைனுக்கு. ராத்திரி EB கரண்ட் தான். பகலில் வீடு பூட்டி இருந்தால் என்ன? அப்போ மிச்ச கரண்ட் EBக்கு போகும். வீட்டுக்கு பொதுவா Net Metering முறை. விண்ணப்ப முறையை பொறுத்து கணக்கு மாறும். பகலில் நீங்களே பயன்படுத்தினா தான் அதிக லாபம்.
500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினா முதல் 200 யூனிட் இலவசம். 500 ஐ தாண்டினா 100 யூனிட் மட்டும் இலவசம். அதுக்கு மேல 4.70 ரூபாய் முதல் 11.55 ரூபாய் வரை கட்டணம்.
இலவசமா கிடைக்குற யூனிட்டை சோலார் மூலம் மறுபடியும் சேமிக்க முடியாது. காசு கட்டுற யூனிட்டை குறைச்சா தான் லாபம்.
சிஸ்டம் 1 kWக்கு சுமார் 70,000 ரூபாய் முதல் 85,000 ரூபாய் வரை. 1 kW 2 மாசத்துக்கு வருஷ சராசரியில் சுமார் 240 யூனிட் தரும்.
மானியம் இப்போ ரெண்டும் சேர்ந்து வருது. 1 kWக்கு மொத்தம் 35,000 ரூபாய், 2 kWக்கு 70,000 ரூபாய், 3 kWக்கு மேல 1,00,000 ரூபாய்.
இது 5 ஆகஸ்ட் 2026 க்கு பிறகு பதிவு செஞ்சவங்களுக்கு மட்டும். DCR பேனல் போன்ற நிபந்தனைகள் உண்டு. மானியம் வேலை முடிந்த பிறகு வரும்.
அப்போ யாருக்கு தான் லாபம்?
500 யூனிட்டுக்கு மேல பயன்படுத்தி பில் 2,000 ரூபாய்க்கு மேல வர்றவங்களுக்கு தான் பெரிய லாபம்.
AC, மோட்டார், EV இருக்குற, பகலில் கரண்ட் அதிகம் பயன்படுத்துற வீடு இதில் வரும்.
கணக்கு பாருங்க.
300 யூனிட் வீட்டுக்கு பில் 470 ரூபாய் தான். 1 kW போட்டா அதிகபட்சம் 470 ரூபாய் வரை மிச்சம். 42,500 ரூபாய் செலவு திரும்ப சுமார் 15 வருஷம் ஆகும்.
600 யூனிட் வீட்டுக்கு பில் 2,880 ரூபாய். 2 kW சுமார் 480 யூனிட் தரும். நிகர பயன்பாடு 120 யூனிட் ஆகி, 500 க்கு கீழே வந்ததால் இலவசம் 200 ஆகி பில் மிக குறைவாக வரும். நிலையான கட்டணம் மட்டும் வரும். 72,500 ரூபாய் செலவு 4 முதல் 5 வருஷத்தில் திரும்பும்.
அதே 800 யூனிட் பயன்படுத்துற வீட்டுக்கு பில் 4,770 ரூபாய். 3 kW சுமார் 720 யூனிட் தரும். நிகர பயன்பாடு 80 யூனிட் ஆகி பில் மிக குறைவாக வரும். 1,00,000 ரூபாய் செலவு 3 முதல் 5 வருஷத்தில் திரும்பும்.
300 யூனிட்டுக்குள் பயன்படுத்துறவங்களுக்கு பயன் குறைவு. ஆனா பகல் பயன்பாடு அதிகம் இருந்தா கணக்கு மாறலாம்.
நிழல் கூரை உள்ளவங்களும் அவசரப்பட வேண்டாம். கூரையில் நிழல் எப்படி இருக்கிறது என்று பாருங்க.
கரண்ட் கட் நேரத்துக்கு மட்டும் சோலார் எதிர்பார்க்காதீங்க. On Grid சிஸ்டம் கட் ஆனா நின்னுடும். பேக்கப் வேணும்னா Hybrid தான். அதுக்கு மானியம் கிடையாது.
சிஸ்டம் அளவை பகல் பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்ந்தெடுங்க. தேவைக்கு மேல பெரிய சிஸ்டம் வேண்டாம். AC EV திட்டத்தையும் சேர்த்து கணக்கு போடுங்க.
நல்ல Earthing உயிர் பாதுகாப்புக்கு அவசியம். Surge Protection இன்வெர்டர் பாதுகாப்புக்கு தேவை. இல்லைனா மின்னல் மின் அழுத்த மாற்றத்தின்போது சிஸ்டம் பழுதாகும்.
உங்களுக்கு சரியா என்று பாருங்க. பில் 500 க்கு மேலயா. பகலில் வீட்டில் ஆள் இருக்காங்களா. கூரையில் நிழல் இல்லையா. மூன்றும் ஆமானா தான் பெரிய லாபம்.
மூன்றும் இருந்தா நல்ல முதலீடு.
சோலாலை பற்றிய உங்களுடைய முடிவு விளம்பரத்தை நம்பி அல்ல, உங்க EB பில் கணக்கை பார்த்துதான் இருக்கணும்.
