Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

Published

on

  1. தமிழ்நாட்டின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் வழங்கியுள்ளது டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை. 1.கடலூர் வெள்ளி கடற்கரை 2.நாகை காமேஸ்வரம் கடற்கரை 3.இராமநாதபுரம் அரியமான் கடற்கரை 4.கோவளம் கடற்கரை.
  2. குழந்தைகள் தினத்தை ஒட்டி சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்குகிறார் முதல்வர் விஜய்.
  3. சென்னையில் பார்க்கிங் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய திட்டம். நடைபாதை ஆக்கிரமிப்பு, இரட்டை வரிசை பார்க்கிங், NO Parking –ல் நிறுத்தினால் நடவடிக்கை. பார்க்கிங் விதிமீறல்களைக் கண்டறிய கிமி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்த திட்டம். Edge AI Smart Parking திட்டத்திற்கு டெண்டர் கோரியது பெருநகர போக்குவரத்து ஆணையம்.
  4. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட முக்கிய சேவைகள் முடங்கியதால்  கோடிக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறின் தாக்கம் ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக் உள்ளிட்ட தொழில்நுட்பச் சேவைகளிலும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்துள்ளன. சர்வர்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மைக்ரோசாப்ட்  தெரிவித்துள்ளது.
  5. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.எஸ்.கர்ணன் (71) உடல்நலக்குறைவால் இன்று (நவ.13) காலமானார்.
  6. மத்திய கிழக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் வாஷிங்டனுக்குப் பதிலாக சீனாவின் ராஜதந்திரத் தலைமையை தெஹ்ரான் வெளிப்படையாக ஏற்கிறது என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
  7. நவம்பர் 25ம் தேதி விவசாயிகள் போராட்டம். விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யம் வரை போராட்டம் தொடரும். விவசாய சங்கங்கள் அறிவிப்ப.
  8. இந்தியாவில் மாதாந்திர மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் – பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் கருத்து! ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்த இந்தக் கருத்து தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
  9. நோய்ப்பரவல், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, புதிய தொற்று பாதிப்பு உள்ளிட்ட முக்கியத் தரவுகளை ஒவ்வொரு மாதமும் வெளியிடுவதை நிறுத்தியது தமிழ்நாடு சுகாதாரத்துறை. மேலும், அரசின் மருத்துவதிட்டங்களின் தாக்கங்கள், மருத்துவ ஆராய்ச்சி, நோய்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இதழ் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
  10. தென்னிந்தியாவின் பிரபல உணவகமான அடையாறு ஆனந்த பவன் தனது பெரும்பான்மை பங்குகளை ஜேம்ஸ் முர்டோக் மற்றம் JIOHOTSTAR  துணைத்தலைவர் உதய் சங்கரின் “போதி ட்ரீ சிஸ்டம்ஸ்“ நிறுவனத்திற்கு ரூ.1600 கோடிக்கு விற்றுள்ளது. இதன்  மூலம் அதன் மொத்த மதிப்பு ரூ.3100 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டைக் கொண்டு மேற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய கிளைகளை திறக்கவும் நிறுவனத்தை எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் புதிய தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா2 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

Uncategorized3 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா7 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா4 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..