இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

- அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு தனியாகப் பணியிடைநீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தானாகவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவார் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
- சொந்த தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி, அதனை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய உலகின் 9-வது நாடு என்ற வரலாற்றுச் சாதனையை ஈரான் தம் பக்கம் வைத்துள்ளது
- நீர்வளத்துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஏரி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். நீர்நிலைகள் புனரமைப்புக்கான அனுமதிகளை வழங்க இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ( eri.tn.gov.in ).
- ஏவுகணைகளின் தாக்குதல் தூரத்திற்கு விதித்திருந்த சுயக் கட்டுப்பாட்டை நீக்கியதாக ஈரான் அறிவிப்பு!
- தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் நாளை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை!
- நவ.13ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
- குடியாத்தம் பாமக நிர்வாகி சுட்டுக்கொலை: பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
- டெல்லியில் நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் (கட்கா) பிரிவில் தமிழக மாணவி கே. புவனபிரியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!
- 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் காலமானார்! 104 வயதில் அப்துல் கரீம் மௌலவி மறைவு!

