ஆரோக்கியம்
கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!
Published
49 minutes agoon
By
Poovizhi
இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பஅலை நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தேவையற்ற நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசியமான சூழலில் வெளியே செல்லும்போது உடலை முழுமையாக மூடி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தால் உடல் சூடு, நீரிழப்பு, கண் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இந்த சூழலில், உடலை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்க சரியான உணவுகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
சித்த மருத்துவர் டாக்டர் ஜெயரூபா அவர்கள், உடல் சூட்டை குறைத்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் 3 முக்கிய உணவுகளை பரிந்துரைத்துள்ளார்.
1. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது. கலோரி அளவும் குறைவாக இருப்பதால், கோடை காலத்திற்கு இது சிறந்த உணவாக கருதப்படுகிறது.
வெள்ளரிக்காயை நேரடியாக சாப்பிடலாம் அல்லது சாலட் வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
2. இளநீர்
இளநீர் இயற்கையான எலக்ட்ரோலைட் பானமாக கருதப்படுகிறது. இது உடலில் இழக்கும் நீர்ச்சத்தைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கிறது.
கோடை காலத்தில் கூல்டிரிங்க்ஸ் மற்றும் கார்பனேட்டட் பானங்களைத் தவிர்த்து, இளநீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது உடல் சூட்டை குறைத்து, சோர்வை நீக்க உதவுகிறது.
3. நன்னாரி சர்பத்
நன்னாரி சர்பத் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வழங்கும் பாரம்பரிய பானமாகும். இது உடல் வெப்பத்தை குறைப்பதோடு, சிறுநீர் எரிச்சல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.
கோடையில் தினசரி உணவில் நன்னாரி பானத்தை சேர்த்துக் கொள்வது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
கோடை காலத்தில் உடல்நலத்தை பாதுகாக்க போதுமான தண்ணீர் குடிப்பது, குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது மற்றும் வெயிலில் அதிக நேரம் செலவிடாமல் இருப்பது அவசியம். இயற்கையான உணவுப் பழக்கங்கள் மூலம் உடல் சூட்டை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக இருக்கலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.















