இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

- தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலம் என அழைக்கப்படும் ஆழ்கடல் பகுதியில் 9990.96 சதுர கி.மீ. பரப்ளவில் வைறட்ரோகார்பன் ஆண்வுக்காக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் டெண்டர் விடப்பட்டள்ளது. இப்குதி ஆமைகள் கடல் பாலூட்டிகள் போன்ற அரிய அழிந்து வரும் உயிரினங்கள் வாழும் பகுதியாகும்.
- கொடைக்கானல் நட்சத்திர ஏரிப்பகுதியில் குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம்.
- புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டிலிருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம். புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது. 2ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே பயின்ற மொழிக்கெ மீண்டும் மாறுவார்கள் என தெரிவிப்பு. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பிரெஞ்சு பயின்று வரும் மாணவர்கள் நிலை என்னவாகும் என கல்வியாளர்கள் கேள்வி. 2வது மொழியாக தமிழ் மற்றும் இந்தி மட்டும் கற்ப்பிக்கப்படுமென சில பள்ளிகள் குறுஞ்செய்தி.
- தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மாலை நேரத்தில் மின்சார பெற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய மின்தறை எச்சரிக்கை. தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சமாக 21060 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாக தகவல்.
- கேரளா, தமிழ்நாட்டில் வழக்கமாக ஜீன் 1ம் தேதி தொடங்கம் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வ மையம் கணிப்பு.
- சொந்த நுகர்வுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மது வைக்க அனுமதியளித்து கடந்த 2017ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மனுதாரர் 1 லிட்டர் 680 மில்லி மது மட்டுமே வைத்திருந்துள்ளார். எனவே அவர் மீதான வழக்கு ரத்து














