Connect with us

இந்தியா

இந்தியாவில் எனர்ஜி லாக்டவுன் வருகிறதா?  கொரோனா லாக்டவுன் போலவா? அது எப்படி இருக்கும்?

Published

on

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் மத்தியிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் மீண்டும் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ‘Energy Lockdown’ என்ற சொல் வேகமாக பரவி, இது பொதுமக்கள் மத்தியில் புதிய கவலையை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து வரும் வளைகுடா போரின் காரணமாக ஹார்மோஸ் நீர் சந்தி போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக உலகமெங்கும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை காணப்படுகிறது. இதன்காரணமாக வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை பரவலாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிக்க அணைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருந்தார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தன. நமது நாட்டில் ஏடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இநத நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் எனர்ஜி லாக்டவுன் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு இந்திய மக்களும் தயாராக வேண்டும் என்ற பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த எனர்ஜி லாக்டவுன் என்கிற எரிசக்தி அவசரநிலையானது முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை, மியான்மர், பூட்டான்,ஸ்லோவாகியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளில் எரிபொருள் பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமை மேலும் மோசமானால் இந்தியாவிலும் இந்த நிலை வரக்கூடும்.

Energy Lockdown என்றால் என்ன? ‘Energy Lockdown’ என்பது அதிகாரப்பூர்வமான உலக நாடுகளின் அரசுகள் பயன்படுத்தும் சொல் அல்ல. இது சமூக வலைதளங்களில் உருவான ஒரு புதிய சொல்லாகும். எரிசக்தி பற்றாக்குறை மற்றும் கச்சா எண்ணெய், எரிவாயு விலைகள் அதிகரிப்பின் காரணமாக, உலக நாடுகள் எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் சில தளர்வுகளை அளித்தாலும், முழுமையாக இயல்புநிலைக்கு திரும்புமா என்றால், கட்டாயம் இல்லை என்பது தான் நிதர்சனமாக உள்ளது.

லாக்டவுன் போன்ற நிலையில் பல நாடுகள் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இது 2020 COVID-19 லாக்டவுன் போல நகரங்களை மூடும் அல்லது எல்லைகளை மூடும் நடவடிக்கைகள் அல்ல. இதற்கு பதிலாக, மக்கள் வாழ்க்கை முறையை மாற்றும் வகையிலும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும் முயற்சிகள் உலக நாடுகள் மேற்கொள்ளப்படும். இதனால், அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் காரணத்தால் இதை ‘Energy Lockdown’ என்று மக்கள் இணையத்தில் அழைத்து வருகின்றனர்.

IEA பரிந்துரைகள் International Energy Agency (IEA) உலக நாடுகளுக்கு எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சாத்தியமான இடங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work From Home) நிறுவனங்கள் அனுமதி அளிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை குறைந்தது 10 கிமீ/மணி அளவிற்கு கட்டாயம் குறைக்கை வேண்டும். பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். பெரிய நகரங்களில் தனியார் கார்கள் மாற்று நாட்களில் மட்டுமே சாலையில் இயக்க அனுமதி வழங்கு வேண்டும். சரக்கு வாகனங்கள் மற்றும் விநியோக சேவைகளில் எரிசக்தி சேமிக்கும் வகையில் வாகனங்களை இயக்க வேண்டும். போக்குவரத்து பயன்பாட்டிலிருந்து LPG பயன்பாட்டை குறைக்க வேண்டும். மக்கள் தேவையற்ற விமானப் பயணங்களை தவிர்க்க வேண்டும். நவீன மற்றும் குறைந்த எரிசக்தி பயன்படுத்தும் சமையல் முறைகளுக்கு மாற வேண்டும். பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களின் பயன்பாட்டில் குறைக்கும் வகையில் மேம்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Energy Lockdown’ என்பது முழுமையான லாக்டவுன் அல்ல. ஆனால் எரிசக்தி பற்றாக்குறை காரணமாக, மக்கள் மற்றும் அரசுகள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized8 minutes ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா16 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Reveal dental biolinker.