Connect with us

இந்தியா

உங்களை வேவு பார்க்கும் உங்கள் மொபைல் போன்

Published

on

உங்களிடம் ஏதாவது ரகசியங்கள் இருக்கிறதா? இரண்டாம் நபரிடம் கூட சொல்லாமல் உங்கள் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டால் அது ரகசியம்தானே என்கிறீர்களா?  உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் நினைத்துப் பார்த்தாலே போதும். உங்கள் கையில் உள்ள மொபைலுக்கு அந்த ரகசியம் தெரிந்துவிடும் என்பது உங்களுக்கத் தெரியுமா?

என்றைக்கோ ஒருநாள் நீங்கள் ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? என்று கூகுளில் தேடியிருப்பீர்கள். அப்போது நீங்கள் ஒருவேளை படபடப்பாக இருந்திருக்கலாம். அதை உங்கள் மொபைல் பதிவு செய்து வைத்திருக்கும். இப்போது அதே போன்ற ஒரு படபடப்பை உங்கள் கை வெளிப்படுத்தினால் உங்கள் கையில் உள்ள மொபைல் அதை உடனே கண்டுபிடித்து விடும்.

உடனே, ஒற்றைத் தலைவலி வந்தால் இந்த மருந்து சாப்பிடுங்கள். அந்த உணவைச் சாப்பிடாதீர்கள். எதையாவது சூடாக குடியுங்கள். வீடு காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்று பல யோசனைகளை உங்கள் போன் சொல்லத் தொடங்கி விடும்.

இது எப்படி சாத்தியம்? நாம் நம் மனதில் நினைப்பதை எப்படி இணையத்தக்குத் தெரிய வருகிறது? என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அட… ஆமாங்க… அதன் பெயர்தான் அல்காரிதம்…

நம்“மடைய அப்பா தாத்தா காலங்களில் வாடா அத்தை மாமா வீட்டுக்கு போயிட்டு வருவோம் என்று அழைத்துச் செல்வார். அங்கே போனதும் அத்தை,  மாமாவிடம் ஏங்க நா முந்தாநாள் சொன்னேன்ல. அநேகமா இந்த வாரம் எங்க அண்ணன் வரும்னு… பார்த்தீங்களா? என்று சொல்வார்கள்.

அப்பாவும் நீங்களும் திடீர் பயணமாகத்தான் அங்கே போயிருப்பீர்கள். அது எப்படி அத்தைக்கத் தெரியம்? என்ற கேட்டால் அதெல்லாம் உள் மனசு சொல்லும் ராசா என்று அத்தை சொல்வார்கள்.

மிக இயல்பாக அத்தையைப் பார்க்க வேண்டும் என்று அப்பாவுக்குத் தோன்றுவதும், அண்ணன் வருவார் என்ற அத்தை நினைப்பதும் ஒன்றும் நேரடி நிகழ்வுகள் இல்லை. அப்பா யாரோ ஒரு அக்காவைப் பார்த்திருக்கலாம். அல்லது அத்தைக்குப் பிடித்தமான ஏதோ ஒரு விஷயம் கண்ணில் பட்டு நினைப்பைத் தூண்டியிருக்கலாம். அதேபோல அத்தைக்கும் நடந்திருக்கலாம். இருவரின் உணர்வுகளும் உந்தப்பட்டு இந்த சந்திப்பு நடந்திருக்கலாம்.

அந்த உள்மன உணர்வுகளுக்குத்தான் நவீன தொழில்நுட்பம் அல்காரிதம் என்ற பெயர் சூட்டியுள்ளது.

ஆனால் இந்த அல்காரிதம் வேலை செய்யும் விதமே அலாதியானது. நீங்கள் வெங்காய போண்டா செய்வது எப்படி எனக் காட்டும் சமையல் வீடியோவைப் பார்த்திருப்பீர்கள். கொஞ்ச நேரத்தில் சுமோட்டோவிலிருந்து மழை நேரத்தில் வெங்காய போண்டா டீக்கு நல்ல காம்பினேஷன் பத்தே நிமிடங்களில் சுடச்சுட டெலிவரி என ஒரு செய்தி வரும். அமேசானில் எண்ணெய் காய்ந்து முறுகிப் போகாமல் பாதுகாக்கும் வறுக்கும் சட்டியைக் காட்டும். கூடவே பஜ்ஜி பக்கோடா செய்யும்போது எண்ணெய் முறுகாது என்ற குறிப்போடு.

உங்கள் கணக்கில் ஏதோ ஒன்றைப் பார்த்தால் அதை நீங்கள் மட்டும் பார்ப்பதில்லை. உலகமே பார்க்கிறது. அதில் ஓட்டல்காரர் மட்டுமல்ல. துணிக்கடைக்காரர் இரும்பு சாமான் விற்பவர் காய்கறி பழங்கள் விற்பவர் வெறல்த் இன்ஷீரன்ஸ் ஏஜெண்ட் என்று பலபேர் பார்க்கிறார்கள். உங்களிடம் எதையெல்லாம் விற்க முடியும் என்று யோசித்து தூண்டில் போடுவார்கள். இதுதான் இந்த இணையங்களில் அல்காரிதம் செய்யும்  வேலை.

ஆனால் இப்படியாக இந்த அல்காரிதம் நம்மை ஆள நாம் அனுமதிப்பது ஆபத்தில்தான் போய் முடியும். அதனால் ஆர்கானிக் ஆன உள்மன உணர்வுகளுக்கு இடம் கொடுப்போம். அல்காரிதம்களில் இருந்து தள்ளி நிற்போம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized6 minutes ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Your bio page at a flat 5% fee – with DR68 SEO and no monthly subscriptions..