இந்தியா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது. வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதனால் மக்களின் அன்றாட குடும்பச் சுமை அதிகரித்துவிட்டது. எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10000 வழங்கப்படும்.
நிதித்துறை நிபுணர்கள் மூலமாக எந்தெந்த வகையில் வரியை உயர்த்த முடியுமோ அதை உயர்த்தி நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவோம்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.2000 உதவித்தொகையும் பிளஸ்2 வரை படித்தவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8000 லிருந்து ரூ.12000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யுனிட்டிலிருந்து 450 யுனிட்டாகவும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யுனிட்டிலிருந்து 1400 யுனிட்டாகவும் உயர்த்தப்படும்.
நடைபாதை கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிள கடன் தள்ளுபடி செய்யப்படும்.


