இந்தியா
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் – எதற்காக தெரியுமா?

தினமும் லட்சக்கணக்கான பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் விளையாட்டு போட்டி, இசை நிகழ்ச்சி போன்ற சில முக்கிய நிகழ்வுகள் போது மெட்ரோ ரயில் மூலமாக இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகும். மக்களும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அந்த வகையில் இன்று மாலை இந்த சிங்கார சென்னையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை யொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் அருகே உள்ள Nehru Outdoor Stadium வளாகத்தில், இன்று (14.02.2026) நடைபெறவுள்ள “A.R.Rahman’s The Wonderment Tour இன்னிசை கச்சேரி” நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ இரயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் தனித்தனி நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (Event Ticket) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும். பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 14.02.2026 அன்று காலையிலிருந்து நள்ளிரவு வரை ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு).
இந்தப் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையிலுள்ள எந்தவொரு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை சென்று வரலாம். இதற்கு மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் QR-ஐ ஸ்கேன் செய்யலாம்.
நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு,
- சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am 15.02.2026),
- வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am-15.02.2026),
- பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am- 15.02.2026), புறப்படும்.
- 10 நிமிடங்களுக்கு பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு முன்னதாகவே சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறும்தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படியும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது..


