இந்தியா
2 மாதங்களில் தமிழ்நாடு மக்களுக்கு 9000 ரூபாய் கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காலை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 ஆக மொத்தம் ரூ.5000 அணைத்து பயனாளிகளின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது.
இந்த தொகையை பெற்ற அணைவரது கண்களிலும் எல்லையற்ற மகிழ்ச்சி தாண்டவமாடியது.
இந்த தொகையையும் சேர்த்து இரண்டே மாதங்களில் அணைவருக்கும் ரூ.9000 கிடைத்திருக்கிறது. எப்படி என்கிறீர்களா?
ஜனவரி மாத உரிமைத்தொகை ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000 என ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.4000 அணைவருக்கும் கிடைத்தது. இப்போது பிப்ரவரி மாதத்தில் ரூ.5000 அணைவரது கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.9000 கிடைத்ததில் பல்வேறு குடும்பங்களில் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்த தொகையிலிருந்து ஒரு தொகையை சேமிப்பாக வையுங்கள் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


