இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.02.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.190 குறைந்து கிராம் ரூ.14600க்கும் சவரன் ரூ.116800க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி வலை மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.300000க்கும் விற்பனை ஆகிறது.
- மாணவர்களை திருத்த ஆசிரியர்கள் பிரம்பை பயன்படுத்துவதில் தவறில்லை. காயம் ஏற்படுத்தாமல் பிரம்பை பயன்படுத்தி திருத்த வேண்டும்.. – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- ஷேக் அசீனா ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு வங்கதேசத்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
- ஒன்றிய அரசின் 4 புதிய தொழிலாளர் நலச்சட்டங்களுக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் தொழிற்சங்கங்ஙகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றன.
- திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 10000க்கு மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
- எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
- இந்திய காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒன்றிய அரசு அரசாணை ஆனால் எல்ஐசியில் மட்டும் அந்நிய முதலீடு 20 கதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என தெரிவிப்பு


