இந்தியா
தனிநபர் வருமான வரியில் எந்த மாற்றமுமில்லை.

மாதச் சம்பளம் வாங்குவோர் இப்போதுள்ள ஏற்றத்தாழ்வான பொருளாதார சூழலில் 12 மாத சம்பளம் வாங்கி 2 மாத சம்பளத்தை வருமான வரியாகவே கட்டி விட்டு கஷ்டப்படுவது என்று மாறும்? அதற்கு ஒரு விடிவு காலம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய பட்ஜெட்டில் நல்ல செய்தி வரும். வரி குறையும். நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று இருந்தனர். அவர்கள் நினைப்பில் இடி விழுந்தது போல ஆகிவிட்டது இன்றைய பட்ஜெட் அறிவிப்பு.
வருமானவரிச்சட்டத்தில் பல்வேறு புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 1 முதல் புதிய வருமானவரிச்சட்டம் அமல் செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருப்பது வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது என புலம்பம் நிலை ஏற்பட்டுள்ளது.
தனிநபர்கள் வருமானவரி தாக்கல் செய்ய ஜீலை 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானவரி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை. சென்ற ஆண்டு இருந்த அதே நிலை இந்த ஆண்டும் அப்படியே தொடரும். ஆனால் கல்வி சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 2 சதவீதமாக குறைப்பு என்ற அறிவிப்பு ஒன்றுதான் சற்றே ஆசுவாசமளிக்கிறது.
மேலும் வருமானவரி குறித்து பொய் தகவல் அளித்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் வருமானத்தை குறைத்துக் காட்டினால் வருமானத்துடன் 100 சதவீத அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று மாத சம்பளக்காரர்களைத்தான் மிரட்ட முடியும். மிரட்டிப் பார்க்கிறது அரசு.
வருமானவரி கணக்கு தாக்கல் முறை எளிமையாக்கப்படும் என்பது விழலுக்கு இறைத்த நீர்தானே.











