இந்தியா
பட்ஜெட் 2026-27 – சாமானியனுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்

பட்ஜெட் 2026-27 – சாமானியனுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்
இன்று ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை 9வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்
நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
தமிழ்நாட்டுக்குள் எந்த புதிய ரயில் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
வரும் சட்டமன்ற தேர்தலுக்காகக் கூட தமிழ்நாட்டிற்காக எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை
சென்னை 2வது கட்ட மெட்ரோவுக்கு நிதி இல்லை
வரி சார்ந்த குற்றங்களுக்காக அதிகபட்ச தண்டணையாக 2 வருடம் சிறை அறிவிப்பு
உலக அளவிலான புதிய உயிரி மருத்துவத்தை முன்னிறுத்தும் பயோ பார்மா சக்தி திட்டம் மூலம் உயிரி மருந்து உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றிட அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10000 கோடி ஒதுக்கப்படும்.இதற்காக 3 தேசிய அளவிலான புதிய மருந்தாளுமை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவை ஏற்கனவே உள்ள 7 நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் போது இதன்மூலம் 1000 புதிய ஆய்வகங்கள் உருவாகவும் வாய்ப்பு.
இந்திய செமி கண்டக்டர் மிஷன் 1.0 திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0 உருவாக்கப்பட்டு தொழில்நுட்பம் வளர உதவி செய்யப்படும்.
ஏப்ரல் 2025ல் ரூ.22919 கோடியில் தொடங்கப்பட்ட மிண்ணணு சாதனங்கள் உற்பத்திக்கான திட்டம் கூடுதல் நிதியோடு ரூ.40000 கோடியில் விரிவுபடுத்தப்படும்.
ஒடிசா கேரளா ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை இணைக்கும் விதமாக அரிய வகை கனிம வழித்தடம் உருவாக்கப்படும்.
உள்நாட்டில் வேதிப்பொருள்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி இறக்குமதியை குறைக்கும் விதமாக 3 வேதியியல் புங்காக்கள் நிறுவப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கண்டெய்னர் பெட்டிகள் தயாரிப்பை ஊக்குவித்திட ரூ.10000 கோடி செலவிடப்படும்.
மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
காதி கைத்தறி கைவினைப்பொருட்கள் துறைகளை மேம்படுத்த மகாத்மா காந்தி ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.10000 கோடி செலவிடப்படும்.
கிழக்கில் டாங்குனி யிலிருந்து மேற்கில் சூரத் வரையிலான சரக்கு போக்குவரத்துக்கு புதிய வழித்தடம் அமைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அமைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தொழிற்சாலைகளில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்தி பயன்படுத்திட ரூ.20000 கோடி செலவிப்படும்.
சுற்றுச்சூழலோடு இணைந்த பயணிகள் பாதுகாப்பை வளர்த்திட 7 அதிவேக ரயில்வழித்தடங்கள் அமைக்கப்படும். மும்பை-புனே புனே-ஐதராபாத் ஐதராபாத்-சென்னை ஐதராபாத்-பெங்களுரு சென்னை-பெங்களுரு டெல்லி-வாரணாசி வாரணாசி-சிலிகுரி ஆகிய வழிகளில் புதிய தடங்கள் அமைக்கப்படும்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் நகராட்சி பத்திரம் வெளியிட்டு நிதியை திரட்ட ரூ.100 கோடியில் புதிய திட்டம்
அடுத்த 5 ஆண்டுகளில் 10 குறிப்பிட்ட துறைகளில் 100000 உதவி சுகாதார பணியாளர்கள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப் படுவார்கள். மேலும் வரும் ஆண்டுகளிவ் 1.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்
மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக 5 பிராந்திய மருத்துவத் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேதத் துறையில் 3 பயிற்சி நிலையங்கள் மருந்தகங்கள் ஆய்வகங்கள் ஆகியவை உயர்தரமாக சூழலுக்கு உகந்த வகையில் அமைத்துத் தரப்படும்.
கல்வித்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க 5 பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்
உயர்கல்வி மையங்களில் பயிலும் மகளிருக்காக நாட்டின் அணைத்து மாவட்டங்களிலும் 1 மகளிர் விடுதி அமைக்கப்படும். (தமிழ்நாட்டைப் பார்த்து காப்பியடித்திருக்கிறார்கள்.)
வானியல் துறையில் 4 புதிய தொலைநோக்கி உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
10000 டூரிஸ்ட் வழிகாட்டிகளுக்கு அவர்களது திறமையை மேம்படுத்திக்கொள்ள 12 வார பயிற்சி வழங்கப்படும்.
பழவேற்காடு ஏரியில் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும்
தமிழ்நாட்டின் பொதிகை மலை உள்பட நாட்டின் 5 இடங்களில் மலையேற்றச் சுற்றுலாவை மேம்படுத்த பயிற்சிகளும் வசதிகளும் செய்து தரப்படும்.
தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்பட நாட்டின் 5 இடங்களில் கலாச்சார மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதனோடு இணைந்த சுற்றுலா ஊக்குவிக்கப்படும்..
2030க்குள் தேங்காய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நடவடிக்கை
இந்தியாவில் முந்திரி கோகோவை ஊக்குவினக்க பிரத்யேக திட்டம்
கடலோரப் பகுதிகளில் தென்னை மரங்கள் சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்
பாரத்-விஸ்தார் Bharat-Vistaar என்ற அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயம் தொடர்பான தரவுகள் அணைத்தும் இணைக்கப்படுவதுடன் விவசாயம் தொடர்பான நடைமுறைகள் அணைத்தும் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
பெண் சுய உதவி தொழில் முனைவோருக்கான SHE Mart என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்கள் வாழிவில் ஒளியேற்றப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான திவ்யாங்ஜன் கௌஷால் யோஜனா திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்து பணிபுரியவும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்க திவ்யாங்ஜன் சகாரா யோஜனா என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.
16வது நிதிக்குழு அறிக்கையின்படி மாநிலங்களுக்கான பகிர்வாக 41 சதவீதத்தை ஏற்றுக்கொண்டு ரூ.1.4 கோடி தொகை ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2026-27 ம் நிதிஆண்டிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பாதுகாப்பத் துறைக்கு 7.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
ராணுவத்தை நவீனமயமாக்க 2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு
உற்பத்திக்கான ஆலைகள் அமைக்க ரூ.10000 கோடி
செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40000 கோடி
சுரங்கங்கள் மெட்ரோக்களுக்கான உபகரணங்களை தயாரிக்க புதிய திட்டம்
மாநிலங்களுக்கு வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
2026ல் நிதிப்பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருக்கிறது
நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 17.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்
வங்கித்துறையை சீரிதிருத்த உயர்மட்டக்குழு அமைக்கப்படும்
2026ல் புலிகள் மாநாட்டை இந்தியா நடத்தும்.
15000 இந்திய பள்ளிகளில் கன்டென்ட் கிரியேட்டர் லேப் அமைக்கப்படும்.
இந்த அறிவிப்புகளில் எது சாமானிய பொதுஜனத்திற்கு நன்மை தரப் போகிறது?












