இந்தியா
மாலை நேர செய்தித் துளிகள் – 02.01.2026

- சென்னை மெரீனா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி கடைகள் மட்டுமே இருக்க வேண்டும். பிற கடைகள் அகற்றப்பட வேண்டும். – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
- ஃபார்முலா ஒன் கார் பந்தயம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும். 11 அணிகள் பங்கேற்கின்றன.
- கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுக்கு நுழைவு சுங்கக் கட்டணம் உயர்வு. ரூ.250லிருந்து ரூ.300 ஆக உயர்வு.
- பலுசிஸ்தானில் சீன ராணுவம் குவிப்பு. இந்தியா தலையிட வேண்டும் என பலூச் தலைவர் கோரிக்கை.
- ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பராசக்தி இசை வெளியீட்டு விழா சன் டிவி யிலும் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
- பழைய ஓய்வுதிய விவகாரத்தில் நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.
- திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிக்கான கருத்து கேட்பிற்காக பிரத்யேக செயலி முதல்வர் நாளை காலை 11.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
