இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 20.12.2025

- இன்றைய தங்கம் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து சவரன் ரூ.99200க்கு விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.226000க்கு விற்பனை ஆகிறது.
- பொருநை அருங்காட்சியகத்தை நெல்லை ரெட்டியார்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் திரைப்பட நடிகர் சோனுசூட் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை
- தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 66,44,881 பேர் முகவரி இல்லாதவர்கள் என்ற எண்ணிக்கை நெருடலாக உள்ளது. அணைத்து அரசியல் கட்சியினரும் இந்த எண்ணிக்கை தொடர்பாக விழிப்போடு பணியாற்ற வேண்டும் என முக்கிய தலைவர்கள் வேண்டுகோள்
- நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை கீழ்க்குறிப்பிட்ட 3 இணையதள முகவரிகளில் பார்க்கலாம். www.electoralsearcheci.gov.in www.erolls.tn.gov.in/asd/ www.elections.tn.gov.in/download-eroll
- பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- இன்றும் நாளையும் அணைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
- வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு – டிரம்ப் எச்சரிககை
- தமிழ்நாடு முழுதும் ஒப்பந்த செவிலியர் காலி பணியிடங்கள் விவரங்கள் டிசம்பர் 22க்குள் சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறையின் மூன்று இயக்குநர்களுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு-8322 பேர் இருப்பதாக தகவல்.
- அரசியல் கட்சிகள் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனவரி 5ம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
- ஊட்டி, தலைக்குந்தா, அவலாஞ்சி, காந்தள், கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜீரோ டிகிரி வெப்பநிலை. உறைபனி பொழிந்து வருகிறது.
- ஜீனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடக்க உள்ள இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும்.
- தென்ஆப்பிரிக்காவுடன் 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா.
- மருத்துவர்கள் இனி மருந்து சீட்டுகளில் தெளிவான கையெழுத்தில் நோயாளிகளுக்கு மருந்துகளை எழுத வேண்டுமென தேசிய மருத்துவக் கவுன்சில் உத்தரவு. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மருத்துவ தவறுகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை.
