Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 20.12.2025

Published

on

  1. இன்றைய தங்கம் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து சவரன் ரூ.99200க்கு விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.226000க்கு விற்பனை ஆகிறது.
  3. பொருநை அருங்காட்சியகத்தை நெல்லை ரெட்டியார்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
  4. சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் திரைப்பட நடிகர் சோனுசூட் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை
  5. தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 66,44,881 பேர் முகவரி இல்லாதவர்கள் என்ற எண்ணிக்கை நெருடலாக உள்ளது. அணைத்து அரசியல் கட்சியினரும் இந்த எண்ணிக்கை தொடர்பாக விழிப்போடு பணியாற்ற வேண்டும் என முக்கிய தலைவர்கள் வேண்டுகோள்
  6. நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை கீழ்க்குறிப்பிட்ட 3 இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.   www.electoralsearcheci.gov.in        www.erolls.tn.gov.in/asd/       www.elections.tn.gov.in/download-eroll
  7. பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  8. இன்றும் நாளையும் அணைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
  9. வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு – டிரம்ப் எச்சரிககை
  10. தமிழ்நாடு முழுதும் ஒப்பந்த செவிலியர் காலி பணியிடங்கள் விவரங்கள் டிசம்பர் 22க்குள் சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறையின் மூன்று இயக்குநர்களுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு-8322 பேர் இருப்பதாக தகவல்.
  11. அரசியல் கட்சிகள் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனவரி 5ம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
  12. ஊட்டி, தலைக்குந்தா, அவலாஞ்சி, காந்தள், கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜீரோ டிகிரி வெப்பநிலை. உறைபனி பொழிந்து வருகிறது.
  13. ஜீனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடக்க உள்ள இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.
  14. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும்.
  15. தென்ஆப்பிரிக்காவுடன் 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா.
  16. மருத்துவர்கள் இனி மருந்து சீட்டுகளில் தெளிவான கையெழுத்தில் நோயாளிகளுக்கு மருந்துகளை எழுத வேண்டுமென தேசிய மருத்துவக் கவுன்சில் உத்தரவு. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மருத்துவ தவறுகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Waco temple killeen.