Connect with us

வணிகம்

டிரம்ப் அதிரடி நடவடிக்கை: கனடா இறக்குமதி பொருட்களுக்கு மேலும் 10% வரி!

Published

on

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் குறித்து கனடா வெளியிட்ட விளம்பரத்தின் சர்ச்சையையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பே அதிக வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மேலும் உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, ஒன்டாரியோ மாகாண அரசு வெளியிட்டிருந்த 60 வினாடி தொலைக்காட்சி விளம்பரமே குறிப்பிடப்படுகிறது.

அந்த விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகனின் 1987ம் ஆண்டின் உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதனால், ரொனால்டு ரீகன் அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

இந்த சர்ச்சைக்கு பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். மேலும், ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டு, அச்சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (அக். 26) டொனால்டு டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “உண்மைகளை தவறாக சித்தரித்ததற்கும், விரோதமான நடவடிக்கைகளுக்கும் பதிலாக, கனடா இறக்குமதி பொருட்களுக்கு தற்போதைய வரிக்கு மேலாக 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-கனடா வர்த்தக உறவுகள் மீண்டும் பதற்றமடையும் நிலையில், இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை பாதிக்கக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..